மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து உட்கட்சி மோதல்களால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2 பிரிவுகளாக பிளவுபட்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம், அக்கட்சியின் பெயரையும், அதன் அதிகாரப்பூர்வ 'பூக்கள் மற்றும் புல்' (Flowers and Grass) சின்னத்தையும் முடக்கி தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்தச்சூழலில் தான், மம்தா பானர்ஜி மற்றும் ரிதப்ரதா பானா்ஜி தலைமையிலான இரு பிரிவுகளுக்கும் தனித்தனி கட்சிப் பெயர் மற்றும் சின்னங்களை ஒதுக்கி தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில், அடுத்த மாதம் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
மம்தா பானர்ஜி - ரிதாப்ரதா பானர்ஜி294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 2 கட்டங்களாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ச்சியாக, 4 வது முறையாக வென்று ஆட்சியமைக்குமா? என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தான், 208 தொகுதிகளில் வென்று மேற்குவங்கத்தில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக. அக்கட்சியின் சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.
அதேசமயம், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே வென்று எதிர்க்கட்சியானது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக மம்தா பானர்ஜி தரப்பு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரிதாப்ரதா பானர்ஜி தரப்பு என இரு பிரிவாக திரிணாமுல் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இதில், மம்தா தரப்பிற்கு வெறும் 15 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அக்கட்சியின் 20 மக்களவை உறுப்பினர்களும் என்.டி.ஏ. கூட்டணிக்கு மாற்றுக் கட்சிக்கு சென்றதுடன், என்.டி.ஏ கூட்டணி ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
டாடா குழுமத்தில் மீண்டும் வெடித்த அதிகார மோதல்.. சந்திரசேகரன் பதவி நீட்டிப்பும் நோயல் எதிர்ப்பும்!இந்தச்சூழலில் தான், 3 முறை முதல்வராக இருந்த மம்தா ”கட்சியை நான் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து புதிதாகக் கட்டி எழுப்புவேன்" என தெரிவித்திருக்கிறார். எனினும், ரிதப்ரதா பானர்ஜி தரப்பு, ”தங்களுக்கே கட்சியின் சின்னம் மற்றும் பெயர் வேண்டும்” என தேர்தல் ஆணையத்தில் உரிமை கோரியிருக்கிறது. இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில், தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை, 1968'-ன் பத்தி 15-ன் கீழ், இரு பிரிவினரும் திரிணாமுல் காங்கிரஸ் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த தடை விதித்தது. மேலும், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை 2அணிகளும் தற்காலிக சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்தும் படி தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
தேர்தல் ஆணையம்மேலும், இரு அணிகளும் தங்களுக்கு விருப்பமான பெயர்களையும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சுயேச்சை சின்னங்களின் பட்டியலில் இருந்து தலா சின்னங்களையும் தேர்வு செய்து செப்டம்பர் 18-ம் தேதி, அதாவது இன்று காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, தாங்களே உண்மையான திரிணமூல் கட்சி என்பதில் உறுதியாக இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான குழு, "கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தவாறே" தனது மாற்றுப் பெயர் மற்றும் சின்ன விருப்பங்களை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. மற்றொரு அணியும், தங்களது விருப்பங்களை தேர்தல் ஆணையத்திடம் அறிவித்திருந்தது.
NEET தேர்வு முறைகேடு எதிரொலி.. இனி மனிதர்கள் இல்லை? ‘AI’ மூலம் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்!இந்தநிலையில் தான், மம்தா தலைமையிலான பிரிவுக்கு "கால்பந்து " சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அணி "மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்" என்கிற பெயரை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல, ரிதாப்ரதா தரப்புக்கு, ‘ஜனநாயக திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரும் அஞ்சல் உறை" சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வாங்க மாநிலத்தில் வரும், அக்டோபர் 6-ஆம் தேதி நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இந்த தற்காலிக முடிவை எடுத்திருக்கிறது. அதேசமயம், உட்கட்சி விவகாரம் குறித்த இறுதித் தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கும் வரை இந்த ஏற்பாடு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ராகுல்காந்திஎனினும், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, "முதலில் சிவசேனா, பிறகு தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணாமுல் காங்கிரஸ். ஒவ்வொரு முறையும், ஒரே பாணியில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் ஒன்று சேர்ந்து, ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன; பின்னர் அதன் தேர்தல் சின்னத்தைப் பறித்துக் கொள்கின்றன” என விமர்சித்திருக்கிறார்.
இந்தச்சூழலில் தான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
”என்னையும் அவரைப்போல மாத்திடாதீங்க..” கண்ணீர்விடும் மாணவர்.. யார் அந்த ரோகித் வேமுலா?
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தயாரிப்பை தற்போதே அனைத்து அணிகளும் தொடங்கிவிட்டன. இந்திய அணியும் நடக்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே உலகக்கோப்பைக்கான முன்னோட்ட அணியை கிட்டத்தட்ட சீல் செய்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வீர்ர்களே 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் நிச்சயம் இடம்பிடிக்க போகிறார்கள், இதில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை.. இந்த சூழலில் உலகக்கோப்பைக்கு முன் இந்திய ஒருநாள் அணியில் என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது.. அதை எப்படி இந்திய அணி சரி செய்யப்போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்..
இந்திய வீரர்களுக்கோ, ரசிகர்களுக்கோ உலகக்கோப்பை என்றால் அது ஒருநாள் உலகக்கோப்பை தான்.. அதனால் தான் 1983-லிருந்து காத்துக்கிடந்த இந்திய ரசிகர்களுக்கு 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் தோல்வியும், 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் தோல்வியும் மறக்கமுடியாத வலியையும், ஆறாத காயத்தையும் கொடுத்துள்ளது. 2003 தோல்விக்கு பிறகு 2011-ல் இந்தியா கோப்பை வென்ற நிலையில், 2023 தோல்விக்கு பிறகு 2027-லும் கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரோகித் சர்மா, விராட் கோலியின் கடைசி உலக்க்கோப்பை என்பதும் இதற்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.
News #TeamIndia ODI & T20I squads announced for West Indies tour of India 2026, along with updated squad for Japan T20I & Asian Games.
More Details ▶️https://t.co/Lxx3Bz8Q14 pic.twitter.com/Y9RGlQ09XK
அறிவிக்கப்பட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில், கில், ரோகித், கோலி, ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் உடன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் துருவ் ஜூரல் இருவரின் பெயரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல ரவீந்திர ஜடேஜா, நிதிஷ்குமார் ரெட்டி, நமன் திர் போன்ற வீர்ர்கள் சேர்க்கப்பட்டிருப்பது பேட்டிங் ஆல்ரவுண்டர்கள் பக்கம் தேர்வுக்குழு திரும்பியிருப்பதை காட்டுகிறது. ஒரே ஒரு ஸ்பின்னராக குல்தீப் யாதவே அணியில் நீடிக்கிறார். பந்துவீச்சில் பும்ரா தவிர்த்து சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், அகிப் நபி மற்றும் கூடுதலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அணி உலகக்கோப்பையை மனதில் வைத்தே தேர்வுசெய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வீரர்களின் ஃபார்மும் முக்கிய பங்கெடுத்துள்ளன.
அணியில் என்னென்ன பிரச்னை இருக்கிறது?அனுபவம் வாய்ந்த வீர்ர்கள், இளம் வீர்ர்கள் என ஒரு சிறந்த கலவையாக அணி தென்பட்டாலும், டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட இடது கை பேட்ஸ்மேன் இடம்பெறவில்லை. ஜெய்ஸ்வால் இருந்தாலும் அவர் பேக்கப்பிற்காக மட்டுமே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது, இஷான் கிஷன் பெயரும் சேர்க்கப்படவில்லை. ஒருவேளை விக்கெட் சரிந்தால் ஜடேஜாவே முன்வரிசையில் விளையாட வேண்டியிருக்கும். இது 2019 உலகக்கோப்பை அரையிறுதி தோல்வியின் அச்சத்தை நியாபகப்படுத்துகிறது.
rohit - rahul - kohliஇதோடு விராட் கோலியை தவிர்த்து மற்ற எந்த வீர்ர்களும் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள், ரோகித் சர்மாவின் சராசரி 20க்கும் குறைவாகவே இருப்பது பெரிய கவலை. கில், ஸ்ரேயாஷ், ராகுல், கெய்க்வாட் என அனைவருமே புதியவர்கள். கோலி ஒருவரை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் இந்தியாவிற்கு உருவாகலாம். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் சதமடித்த சஞ்சு சாம்சன் அணியின் பார்வையில் இருப்பதாக தெரியவில்லை.
வலுவான பேட்டிங் வரிசை இருந்தும் இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது என்றால், பந்துவீச்சில் ஓட்டைகள் இரண்டு மடங்காகவே இருக்கிறது. பேட்டிங்கில் கோலியை போல, பவுலிங்கில் பும்ரா ஒருவர் மட்டுமே நம்பிக்கையாக இருக்கிறார். அவரும் அடிக்கடி காயம் ஆகக்கூடிய வீரராக இருப்பதால், அது இந்தியாவிற்கு பெரிய பின்னடைவாக மாறும் அபாயம் உள்ளது. பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார் தொடர்ந்து விக்கெட்டை வீழ்த்தக்கூடியவர்கள் அல்ல. சமீபத்தில் அணியில் புறக்கணிக்கப்பட்ட சிராஜ் எப்படி வரபோகிறார் என்பது கேள்விக்குறி. நிதிஷ் குமார் ரெட்டியும் காயமாகக் கூடியவர் என்பதால் அவருடைய இருப்பும் பெரிய கேள்விக்குறியாக தான் பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை கொடுக்கும் 2 பேரின் தேர்வு..இப்படி எல்லாவற்றையும் கடந்து இந்திய அணியின் ஸ்குவாடில் நல்ல தேர்வாக அகிப் நபி மற்றும் நமன் திர் இருவரின் தேர்வு பார்க்கப்படுகிறது. அகிப் நபி ஸ்விங் செய்யக்கூடிய ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பந்துவீச்சை கொண்டுள்ளார், அவர் தற்போது ப்ரைம் ஃபார்மில் இருப்பது இந்தியாவிற்கு உலகக்கோப்பையில் பெரிய பலமாக அமையும். அதேபோல நல்ல பார்ட் டைம் ஸ்பின்னராக சமீபத்தில் அசத்திவரும் நமன் திர், கடைசியாக வந்து ஆட்டத்தையே மாற்றக்கூடிய அதிரடி பேட்டிங்கையும் கொண்டிருக்கிறார். அவரும் அணிக்கு தேவையான ஒருவராகவே இருக்கிறார்.
அகிப் நபிஇந்தியாவின் ஒரே ஸ்பின் நம்பிக்கையான குல்தீப் யாதவை இதுவரை இந்தியா சரியாக பயன்படுத்தவில்லை என்பதே பலரின் ஆதங்கமாக இருந்துவருகிறது. அவரை எப்படி இந்தியா தயார் செய்யப்போகிறது என்பது பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது. துருவ் ஜூரல் அவருடைய ஃபார்மால் அணியில் இடம்பிடித்துள்ளார். இது வெளிநாட்டு ஆடுகளங்களில் எந்தளவு சரியான தேர்வாக இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்..
naman dhirஇப்படி இந்திய அணியில் இத்தனை ஓட்டைகளா என தோன்றினாலும், அனைத்தையும் சரிசெய்து கோப்பை வெல்லும் நாடாக இந்தியா மாறும், கோலி-ரோகித் கோப்பையுடன் விடைபெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்..
மலேசியாவில் முனைவர் பட்டம் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், தமிழக அரசின் உதவித்தொகை தாமதமாகி பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படலாம் எனக் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டது அரசியல் சர்ச்சையை கிளப்பியது. அரசு, கட்டணம் ஏற்கெனவே செலுத்தப்பட்டதாகவும், பல்கலைக்கழக ஒப்புதல் கிடைத்தவுடன் மீதித் தொகை வழங்கப்படும் என விளக்கம் அளித்தது. “என்னையும் ரோகித் வேமுலா நிலைக்கு மாற்றாதீர்கள்” என்ற அவரது வேண்டுகோள், சாதி பாகுபாடு, மாணவர் உரிமைகள், ரோகித் வேமுலா மரணம் போன்ற விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு பயின்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன், தமிழக அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் படிக்க வந்த தனக்கு இந்த ஆண்டுக்கான நிதியுதவி இதுவரை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சட்டமன்றம் வரை பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில், சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு, மாணவர்களுக்கான நிதி வழங்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார். ஆனால், அதற்குப் பிறகும் “எனக்கு நிதி வரவில்லை” என்று பாரதிதாசன் தொடர்ந்து தெரிவித்திருந்தார். நேற்று மீண்டும் வீடியோ வெளியிட்ட அவர், “தமிழக அரசிடமிருந்து வர வேண்டிய நிதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் என்னை பல்கலைக்கழகத்திலிருந்து eliminate செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கண்ணீருடன் உருக்கமாக பேசியிருந்தார்.
MINISTER VANNIYARASUஇந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மாணவருக்கு ஏற்கெனவே இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் பல்கலைக்கழகத்திற்கு செலுத்தப்பட்டுவிட்டதாகவும், அவர் படிக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர் அளித்த உத்தேசப் பட்டியலுக்கான ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும், அது கிடைத்தவுடன் மீதமுள்ள உதவித்தொகை வழங்கப்படும் என்றும் விளக்கமளித்திருக்கிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பாரதிதாசன் கூறிய ஒரு வரிதான். “என்னையும் ரோகித் வெமுலா நிலைக்கு மாற்றிடாதீங்க” என்று அவர் கண்ணீருடன் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், “யார் அந்த ரோகித் வெமுலா? ஏன் அவரை பாரதிதாசன் குறிப்பிட்டார்?” என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
யார் அந்த ரோகித் வெமுலா? முனைவர் பட்ட ஆய்வாளரான அவரது பெயர் ஏன் மீண்டும் பேசப்படுகிறது? என்பதை பார்க்கலாம்.
ABVPஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் வெமுலா. அவரது தாய் ராதிகா வெமுலா, மாலா சமூகத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது தந்தை வட்டேரா சமூகத்தைச் சேர்ந்தவர் எனப் பின்னர் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது. ரோகித் சிறுவயதிலேயே தனது தாயுடன் வளர்ந்து வந்தார். சாதியப் பாகுபாடு மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு மத்தியிலும், கல்விதான் தனது எதிர்காலத்திற்கான ஒரே வழி என்பதை உணர்ந்து படிப்பில் சிறந்து விளங்கிய ரோகித் வேமுலா, ஹைதராபாத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தார். அவர் பயின்ற பல்கலைக்கழகத்திலும் சாதியப் பாகுபாடு இருப்பதாகக் கூறி செயல்பட்டு வந்த அம்பேத்கர் மாணவர் அமைப்பில், ரோகித் வேமுலா தீவிரமாக இயங்கத் தொடங்கினார்.
இந்த நிலையில், 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு 2015-இல் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, அம்பேத்கர் மாணவர் அமைப்பு பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தியது. அதன்பிறகு, அம்பேத்கர் மாணவர் அமைப்பினருக்கும், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ஏபிவிபி மாணவர் தலைவர் சுஷில் குமார், தன்னை அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாகக் குற்றம்சாட்டி புகார் அளித்தார். மறுபுறம், அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர்.
ROHITH VEMULAஇந்த விவகாரம் பல்கலைக்கழக விசாரணைக்கும் சென்றது. பல்கலைக்கழகத்தின் விசாரணைக்குப் பிறகு ரோகித் வேமுலா உள்ளிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர்களுக்கு கல்வி ரீதியான இடைநீக்கம் விதிக்கப்பட்டது. அதன் பிறகு புதிய துணைவேந்தர் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்பட்டார். அவருக்கு ரோகித் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் ’பட்டியலின மாணவர்கள் மீது சாதிய வன்கொடுமை ஏவியே ஏவிபி அமைப்போடு இணக்கமாக செயல்படுகிற நீங்கள், பாதிக்கப்பட்ட எங்களை இப்படி வன்மையாகக் கண்டிப்பதற்கு, எங்களை கருணைக் கொலை பண்ணிவிடுங்கள்’ என்று ஒரு கடிதம் எழுதினார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, பின்னர் அந்த நடவடிக்கை மாற்றப்பட்டு, 2015 டிசம்பரில் ரோகித் வேமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் கல்லூரியில் படிப்பைத் தொடரலாம், ஆனால் விடுதியில் தங்கக் கூடாது, நிர்வாகக் கட்டடத்திற்குள் செல்லக் கூடாது, மாணவர் சங்கத் தேர்தலில் பங்கேற்கக் கூடாது எனத் தடை விதித்து கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டனர்..
விடுதியில் இருந்து வெளியேறிய ரோகித் வேமுலாவும் அவரது நண்பர்களும் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்தவெளியில் தங்கிப் போராட்டம் நடத்தினர். அவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அப்போது பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. ஒரு கையில் சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படமும், மற்றொரு கையில் தனது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் வெளியேறுவது போன்ற காட்சிதான் அது. இந்தச் சூழலில்தான் 2016 ஜனவரி 17 அன்று ரோகித் வேமுலா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல்கலைக்கழகங்களில் சாதியப் பாகுபாடு மற்றும் மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்த விவாதமும் நாடு முழுவதும் தீவிரமடைந்தது.
ரோகித் வேமுலா விட்டுச் சென்றதாகக் கூறப்படும் கடிதமும் இந்த விவகாரத்தில் மிக முக்கியமானதாக மாறியது. நானும் அனைவரும்போலதான் அமைதியாக இருக்க ஆசைப்பட்டேன். ஆனால் என் வரலாறு என்னை அப்படி இருக்க விடவில்லை...”
“ஒரு மனிதனின் மதிப்பு அவனது உடனடி அடையாளமாகவும், அவனுடைய அடுத்தடுத்த வாய்ப்புகளாகவும் சுருக்கப்பட்டுவிட்டது. ஒரு வாக்காக, ஓர் எண்ணாக, ஒரு பொருளாகக் கருதப்படுகிறான். ஒரு மனிதன் ஒரு சிந்திக்கும் மனமாக ஒருபோதும் பார்க்கப்படுவதில்லை” என்ற பொருளில் அவர் எழுதியிருந்தார். மேலும், தான் ஓர் அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, ரோகித் வேமுலாவின் சாதிப் பின்னணி குறித்தும் பின்னர் விசாரணைகள் நடைபெற்றன. மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி அசோக் குமார் ரூபன்வால் தலைமையிலான விசாரணைக் குழுவும் அவரது சாதிச் சான்றிதழ் தொடர்பாக கேள்விகளை எழுப்பியது. அந்தக் குழு அறிக்கையில், ரோகித் வேமுலா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு மாறாக குண்டூர் மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையில், கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ரோகித் வேமுலா ஹிந்து-மாலா சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த சமூகம் ஆந்திரப் பிரதேசத்தில் பட்டியலினப் பிரிவில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் வெவ்வேறு அரசுத் தரப்புகளின் முடிவுகள் மாறுபட்டிருந்தன. பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த ரோகித் வேமுலா மரணம் தொடர்பான வழக்கில், 2024-ம் ஆண்டு தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த மூடல் அறிக்கை (Closure Report) புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில், 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோகித் வேமுலா என்ற மாணவரை தற்கொலைக்குத் தூண்டியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும், அவர் உயர்கல்வி பயில்வதற்காக அவரது தாயார் போலியான சான்றிதழ் பெற்றிருக்கிறார். அவர் பட்டியலினத்தவரே இல்லை. இந்த உண்மை ரோகித்துக்கும் தெரியும். அந்த உண்மை வெளியே தெரிந்துவிட்டால், தன்னுடைய படிப்பிற்கு ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்ற மன அழுத்தத்திலும் குழப்பத்திலும் இருந்ததாலேயே ரோகித் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையின் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்று தெலங்கானா போலீஸ் அந்த அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதனடிப்படையில், தற்கொலை செய்துகொண்டதற்கு அடிப்படை முகாந்திரம் அல்லது குற்றம் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று இந்த வழக்கு விசாரணையில் முடிக்கிறார்கள்.
இந்த முடிவை ரோகித் வேமுலாவின் தாய் ராதிகா வேமுலா மறுத்தார். மேலும், அவரது தாயார் உள்ளிட்டோர் சந்தேகம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தப்படும் என்று தெலங்கானா காவல்துறை டிஜிபி 2024-ல் அறிவித்தார். இன்னமும் ரோகித் வழக்கில் சட்டப் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது...
செய்தியாளர்: ராஜ்குமார்.ர
“தயவுசெய்து என்னைப் படிப்பில் கவனம் செலுத்தவிடுங்கள். மீண்டும் மீண்டும் மன உளைச்சலுக்கும், மனரீதியான தொல்லைகளுக்கும் என்னை ஆளாக்காதீர்கள். எனது கல்வியையும், ஆராய்ச்சியையும் தொடர அமைதியான சூழலை வழங்குங்கள். என்னைப் படிக்கவிடுங்கள்” என மீண்டும் ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்று வருகிறார் பாரதிதாசன் . கடந்த ஆகஸ்ட் மாதம், தனக்கான கல்வி உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் சட்டப்பேரவை வரையிலும் எதிரொலித்திருந்தது. இந்த நிலையில், சமூகநீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வன்னியரசு, மாணவர்களுக்கான நிதி வழங்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகும் தனக்கு உரிய நிதி கிடைக்கவில்லை என பாரதிதாசன் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
MINISTER VANNIYARASUஇந்நிலையில், நேற்று மீண்டும் வீடியோ வெளியிட்ட அவர், “தமிழக அரசிடமிருந்து வர வேண்டிய நிதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் என்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் என்னுடைய ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது என்னால் அங்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு தனது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பயன்படுத்தி தன்னை ஒடுக்க முயற்சிப்பதாகவும், கல்வி உதவித்தொகையை ஆராய்ச்சிக்காகத்தான் பயன்படுத்தினாயா என தன்னிடம் கேள்வி எழுப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். “என்னைப் படிக்க விடுங்கள்.. என்னையும் மற்றொரு ரோஹித் வெமுலாவாக ஆகிவிடாதீர்கள்” என அவர் கண்ணீருடன் உருக்கமாகப் பேசியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் வட்டாரத்திலும் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மாணவருக்கு இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ஏற்கெனவே பல்கலைக்கழகத்திற்கு செலுத்தப்பட்டுவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உதவித்தொகைக்கான செலவினப் பட்டியலை அரசு கேட்டிருந்ததாகவும், மாணவர் அளித்த பட்டியல் ஏற்புடையதாக இல்லாததால் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மாணவர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அரசு கூறியுள்ளது. செலவினப் பட்டியலில் சில குளறுபடிகள் இருப்பதாகத் தெரிவித்து, மாணவர் படிக்கும் பல்கலைக்கழகத்தில் அவர் அளித்த உத்தேசப் பட்டியலுக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும், அந்த ஒப்புதல் கிடைத்தவுடன் மீதமுள்ள உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
CM VIJAYமேலும், மாணவர் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு அளித்த இந்த விளக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் பார்த்தசாரதி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மீண்டும் மீண்டும் சமூகநீதித் துறையும், அவர்களின் IT Wing-ம் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இதுவரை நான் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான விளக்கத்தை ஆதாரங்களுடன் கடந்த மாதம் 26-ஆம் தேதியே சமர்ப்பித்துவிட்டேன்” என பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் இந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்படுவதாக அவர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த உதவித்தொகை திட்டத்தின்கீழ் படித்து வருவதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், அவர்களில் எத்தனை பேர் முதுகலைப் படிப்பும், எத்தனை பேர் ஆராய்ச்சிப் படிப்பும் படித்து வருகின்றனர் என்ற தகவலை துறை வெளியிட வேண்டும் என்றும் பாரதிதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
BHARATHIDASAN“முதுகலைப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் ஒன்றல்ல.. இந்தியாவில் JRF உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தும், அதை விட்டுவிட்டு, இதை ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதி வெளிநாட்டுக்கு வந்து படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தன்னை மீண்டும் மீண்டும் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாக்குவது வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகவும் பாரதிதாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மாணவர் பாரதிதாசன் மற்றும் சமூகநீதி துறை என இருதரப்பிலும் மாறுபட்ட விளக்கங்கள் வெளியாகி வரும் நிலையில், இதில் உண்மை என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எது உண்மை, எது தவறு என்ற விவகாரம் ஒருபுறம் இருந்தாலும், மாணவரின் கல்வி மற்றும் ஆராய்ச்சி எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்து வருகிறது.
நிலவை நாம் வானத்தில் பார்க்கும்போது, அதன் மேற்பரப்பு முழுவதும் ஏராளமான பள்ளங்களுடன் இருப்பதாகச் சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால், அந்த நிலவில் 141 அடி ஆழத்திற்கு பள்ளம் ஒன்று இருப்பதாகச் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படியொரு புதிய பள்ளத்தைத்தான் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA-வின் Lunar Reconnaissance Orbiter எனப்படும் LRO கண்டுபிடித்துள்ளது. பல ஆண்டுகளாக நிலவைச் சுற்றி வந்து அதன் மேற்பரப்பை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து வரும் இந்த விண்கலம், பழைய மற்றும் புதிய புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, நிலவின் மேற்பரப்பில் புதிதாக உருவான மிகப்பெரிய பள்ளம் ஒன்றைக் கண்டறிந்துள்ளது. NASA விஞ்ஞானிகள் இதற்கு McGetchin crater எனப் பெயரிட்டுள்ளனர். நிலவின் கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள இந்தப் பள்ளம், சுமார் 728 அடி அகலமும், 141 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. அதாவது, சுமார் இரண்டு கால்பந்து மைதானங்களின் நீளத்திற்குச் சமமான அகலத்தைக் கொண்டிருக்கிறது.
ஆனால், இவ்வளவு பெரிய பள்ளம் எப்படி உருவானது? NASA விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, ஒரு சிறுகோள் அல்லது வால்நட்சத்திரத்தின் ஒரு பகுதி நிலவின் மேற்பரப்பில் மோதியதால்தான் இந்தப் பள்ளம் உருவாகியிருக்கலாம் என்றும், அந்த விண்கல் சுமார் 3 முதல் 6 மாடிக் கட்டடத்தின் அளவுக்கு இருந்திருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த மோதல் 2024-ம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 22-ம் தேதிக்குள் ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்தப் பள்ளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 4 மைல், அதாவது 6.4 கி.மீ. அகலத்திற்கு நிலவின் மேற்பரப்பு மாறியிருப்பதை NASA-வின் Diviner என்ற கருவியின் தரவுகள் காட்டுகின்றன. இந்தப் பகுதி சுற்றியுள்ள நிலப்பரப்பைவிட இரவு நேரத்தில் சுமார் 16 டிகிரி Fahrenheit அளவுக்கு குளிர்ச்சியாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், விண்கல் மோதியபோது நிலவின் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் பாறைத்துகள்கள் எனப்படும் regolith தளர்ந்து, அதிகமாகக் கிளறப்பட்டிருக்கிறது.
இதனால் அந்தப் பகுதி வெப்பத்தை வழக்கம்போல் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்படி பல கோடி ஆண்டுகளாக இருந்த பள்ளங்களுக்கு மத்தியில், சமீப காலத்தில் உருவான ஒரு புதிய பள்ளத்தை NASA கண்டுபிடித்திருப்பது, நிலவு இன்னும் முழுமையாக அமைதியான உலகம் இல்லை என்பதையே காட்டுகிறது. நாம் பூமியில் இருந்து அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலவின் மேற்பரப்பில், விண்கற்களின் தாக்கத்தால் இன்றும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன!
எஃப்1 கார் பந்தயத்தில் 4 முறை உலக சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், 'Max vs 100' என்ற சிறப்பு கோ-கார்ட்டிங் பந்தயத்தில் 100 போட்டியாளர்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ரெட் புல் அமைப்பின் சார்பில் சில்வர்ஸ்டோனில் நடத்தப்பட்ட 'Max vs 100' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோ-கார்ட்டிங் பந்தயத்தில் 100 போட்டியாளர்களையும் முந்தி 4 முறை எஃப்1 உலக சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் அபார வெற்றி பெற்றுள்ளார். அமைப்பாளர்கள் 30 சுற்றுகள் மற்றும் 75 நிமிடங்கள் அவகாசம் அளித்திருந்த நிலையில், முதல் சுற்றிலேயே 60 பேரைக் கடந்த அவர், வெறும் 14 சுற்றுகளில் 100 பேரையும் முந்தி வெற்றி பெற்றார். பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், வெர்ஸ்டாப்பன் 101-ஆவது ஆளாகக் கடைசியில் இருந்து காரை இயக்கினார்.
verstappenபந்தயம் தொடங்கிய முதல் சுற்றிலேயே (Lap 1) ஏற்பட்ட நெரிசலையும் திருப்பங்களையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, 60-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை ஒரே சுற்றில் வெர்ஸ்டாப்பன் முந்தினார். பந்தயம் நடைபெற்ற 35 நிமிடங்களில், சராசரியாக ஒவ்வொரு 21 வினாடிகளுக்கும் ஒரு போட்டியாளரை வெர்ஸ்டாப்பன் முந்திச் சென்று அசத்தினார். பெரும்பாலான சுற்றுகளில் முன்னிலையில் இருந்த டச்சு F1 செய்தியாளர் ஜாக்கி மார்ட்டென்ஸ் (Jacky Martens) 2-ஆம் இடத்தையும், ரெட் புல் குழுவின் தொழில்நுட்ப வல்லுநர் லூயிஸ் ஆஸ்லர் (Lewis Osler) 3-ஆம் இடத்தையும் பிடித்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், “100 கோ-கார்ட்டுகள் எனக்கு முன்னால் நிற்பதைப் பார்த்தபோது சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் பந்தயம் செல்லச் செல்ல பழைய நாட்களுக்குச் சென்று கார்ட்டிங் செய்தது போன்ற சிறந்த அனுபவமாக மாறியது" என தெரிவித்துள்ளார்.